

குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து வந்தாலும், நோய் காரணமாக தினமும் சராசரி யாக 5 வயதுக்குட்பட்ட 16 ஆயிரம் குழந்தைகள் பலியாவதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும் இணைந்து குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து ஓர் ஆய்வு நடத்தின. அதன் விவரம்.
கடந்த 1990-ம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட 1.27 கோடி குழந்தைகள் பல்வேறு தடுக்கக் கூடிய நோய் காரணமாக உயிரி ழந்தன. இது இந்த ஆண்டில் 59 லட்சமாக இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டு களில் குழந்தைகள் இறப்பு விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது.
குறை பிரசவம், நிமோனியா, டயரியா, செப்சிஸ், மலேரியா, குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளன. எனினும் இவை தடுக்கக்கூடியவைதான்.
அதேநேரம் கடந்த 2000-வது ஆண்டு முதல் இதுவரை 4.8 கோடி குழந்தைகள் மரணத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
2030-ம் ஆண்டுக்குள் குழந் தைகள் இறப்பு விகிதத்தை 1000-க்கு 25 ஆகக் குறைக்க வேண்டும் என புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.