Published : 30 Jul 2020 11:40 AM
Last Updated : 30 Jul 2020 11:40 AM

ரஷ்யாவுக்கு சம்பாதித்துக் கொடுக்கின்றனர், ஆனால் நம் படைகள் இந்நாடுகளைக் காக்க வேண்டுமா? - ஜெர்மனி மீது ட்ரம்ப் திடீர்ப் பாய்ச்சல்

ஜெர்மனியிலிருந்து 11,000 அமெரிக்கப் படையினரை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஜெர்மனி மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனங்களை தொடுத்துள்ளார்.

அதாவது ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

இந்நிலையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆண்டொன்றுக்கு எரிசக்தி தொடர்பாக ரஷ்யாவுக்கு பில்லியன் டாலர்கள் கணக்கில் அள்ளிக் கொடுக்கிறது ஜெர்மனி. ஆனால் நாம் ஜெர்மனியை ரஷ்யாவிடமிருந்து காக்க வேண்டும் இல்லையா! இதெல்லாம் என்ன? நேட்டோவுக்கு 2% கட்டணம் செலுத்துவதில் கூட ஜெர்மனி ஒரு குற்றவாளியாக நடந்து கொள்கிறது. . எனவேதான் ஜெர்மனியிலிருந்து படைகளை வாபஸ் பெறுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஜெர்மனியில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை 35,000த்திலிருந்து 24,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆதிக்கம் தெற்காசியப் பகுதியில் தென் சீனக் கடல் பகுதியில் அதிகரித்துள்ளதால் பழைய பனிப்போர் காலக்கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளை ரஷ்ய சோஷலிசத்திலிருந்து காக்க அமெரிக்கா தன் படைகளை அனுப்பியது, தற்போது சீனாவை எதிர்கொள்ள இந்தப் படைகளை பயன்படுத்த ஜெர்மனியிலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கெனவே மைக் பாம்பியோ, ’நம் ஐரோப்பிய நண்பர்கள்’ என்றுதான் விளித்தார், ஆனால் ட்ரம்ப்போ தற்போது ஜெர்மனியைக் குற்றவாளி என்று கூறியுள்ளார்.

நாட்டின் ஜிடிபியில் நேட்டோவுக்காக 2% பட்ஜெட் ஒதுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம், ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த இலக்கை எட்டுவதில்லை, இதைத்தான் ட்ரம்ப் குறிப்பிட்டு, ஜெர்மனியைக் குற்றவாளி என்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x