

ஐநாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே சீனாவின் முரட்டுத்தனத்துக்கு அதிபர் ஜி ஜின்பிங்கின் முரட்டுத்தனமே காரணம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஜின்பிங் அதிபராவதற்கு முன்பாக சீனாவின் அதிகாரிகள் திரைமறைவில்தான் ஐநா பதவிகளை பிடிக்க வேலை செய்வார்கள். ஆனால் ஜின்பிங் அதிபரான பிறகு அவர் தன்னை ஒரு ராஜா போல் காட்டிக்கொள்வதால் அது அப்படியே அதிகாரிகளையும் தொற்றிக் கொண்டுள்ளது.
இதனாலேயே அந்நாட்டு அதிகாரிகள் முரட்டுத்தனமான குணத்தை, நடத்தையை வெளிப்படுத்துகின்றனர்.
ஐநாவில் விரலை சொடுக்கி பதவிகளைப் பிடிக்கவும் தங்களுக்கு வாக்களிக்குமாறு உறுப்புநாடுகளை மிரட்டவும் சீன அதிகாரிகள் துணிந்துள்ளனர்.
சீனாவிலும் அடக்கு முறை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அடக்கினால் புரட்சி வெடிக்கும் என்பதே வரலாறு. ஹாங்காங், தைவான், தென் சீனக் கடல், தற்போது இந்தியா என்று சீனா சீண்டி வருகிறது.
என்ன செய்தாலும் அமெரிக்காவை சீனா ஒன்றும் செய்ய முடியாது. ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூடியது சரியே. அமெரிக்க அறிவுச்சொத்துரிமை முதல் கரோனா தடுப்பூசி வரை ஆய்வுகளை சீனா திருடுவது உண்மைதான்.
இவ்வாறு கூறினார் நிக்கி ஹாலே.