பன்னாட்டுச் சட்டத்தை காக்கிறோம் என்ற பாசாங்கில் அமெரிக்கா சுயநல லாபங்களை அடையும்: அமெரிக்கா மீது சீனா கடும் தாக்கு

பன்னாட்டுச் சட்டத்தை காக்கிறோம் என்ற பாசாங்கில் அமெரிக்கா சுயநல லாபங்களை அடையும்: அமெரிக்கா மீது சீனா கடும் தாக்கு
Updated on
1 min read

அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தது சீனா. அதில் அமெரிக்கா எப்போதும் பன்னாட்டுச் சட்டத்தைக் காக்கிறோம் என்ற போர்வையில் சுயநல லாபம் ஈட்டுவதைத்தான் செய்து வருகிறது என்று சாடினார்.

தென் சீனக் கடல் பகுதி ஒன்றும் சீன ராஜாங்கம் கிடையாது என்று மைக் பாம்பியோ ட்வீட் செய்ததற்கு எதிர்வினையாற்றிய சீன அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வெங்பின்,

“மைக் பாம்பியோ பன்னாட்டுச் சட்டம் பற்றி வாய்கிழிய பேசுகிறார். ஆனால் அனைவருக்கும் தெரியும் பன்னாட்டுச் சட்டத்தை மதிக்கிறோம் என்ற போர்வையில் அதை காலில் போட்டு மிதித்து தன்னல லாபங்களை குறிவைத்து அடைவதுதான் அமெரிக்காவின் செயலாக இருந்து வருகிறது.

பன்னாட்டுச் சட்டம் என்பதை ஆயுதமாக்கி அதை தேர்ந்தெடுத்த விதத்தில் பயன்படுத்தி, சுயலாபம் அடைவதே அதன் வேலை என்பதை உலகு அறியும்.

அமெரிக்கா இதுவரை 10 பன்னாட்டு ஒப்பந்தங்கள், அமைப்புகளிலிருந்து வெளியேறியுள்ளது. உலகின் நம்பர் 1 வெளியேறி யார் என்றால் அமெரிக்காதான்.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் 2,000 த்துக்கும் மேற்பட்ட போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டதை உலகே அறியும். ஜூலை 15 முதல் தென் சீனக் கடலில் 12 நாட்களுக்குத் தொடர்ச்சியாக அமெரிக்க போர் விமானம் பறந்தது. எனவே அமெரிக்காவை அதன் மறைமுக திட்டத்தில் முகமூடியைக் கிழிக்க வேண்டும்.

பாம்பியோவிடம் தெரிவிப்பது என்னவெனில் தென் சீனக் கடல் என்பது ஹவாய் அல்ல. சமாதான விரும்பிகளான ஆசிய நாடுகள் அமெரிக்காவின் அரசியல்வாதிகள் நீரில் சேற்றைக் கலக்கும் விஷயத்துக்கு உதவாது.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in