

பாலஸ்தீனத்தில் இரண்டு பள்ளிகள் கட்டுவதற்கு இந்தியா உதவி செய்கிறது. அதற்காக, 7 லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.4 கோடியே 20 லட்சம்) இந்தியா பாலஸ்தீனத்துக்கு வழங்கி இருக்கிறது.
2012-ம் ஆண்டு பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்திருந்த போது இந்தியாவுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அதன்படி, பாலஸ்தீனத்தில் கல்வி நிலையை உயர்த்த, அங்கு இரண்டு பள்ளிகளைக் கட்டு வதற்கு இந்தியா 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 10 கோடியே 80 லட்சம் ரூபாய்) வழங்கி உதவும். தற்போது வழங் கப்பட்டுள்ள 7 லட்சம் அமெரிக்க டாலர்கள் இரண்டாவது தவணை யாகும்.
நபுலஸ் நகரத்தில் ஜவஹர் லால் நேரு பெண்கள் பள்ளியும், கிழக்கு ஜெருசலேமில் அபு திஸ் எனும் இடத்தில் ஜவஹர்லால் நேரு ஆண்கள் பள்ளியும் கட்டப் படவுள்ளன. இதுகுறித்து பாலஸ் தீனத்தின் கல்வித் துறையின் இயக்குநர் பவாஸ் முஜாஹீத் கூறும்போது, "இந்தியாவின் பங்களிப்பைக் கண்டு நாங்கள் மகிழ்கிறோம். இதனால், நபுலஸ், அபு திஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் ஏற்படும் மாணவர் நெரிசலைக் குறைக்க முடியும். பாலஸ்தீன இளைஞர்கள் கல்வி கற்க இந்தியா எப்போதும் முன்னணியில் நிற்கிறது. இந்திய அரசின் பல்வேறு திட்டங்களால் எங்கள் இளைஞர்கள் தொழில் நுட்ப அறிவு பெற்றிருக்கிறார் கள். இந்தியாவிடம் இருந்து எங்களுக்குக் கிடைக்கும் துணிச்ச லான அரசியல் ஆதரவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்" என்றார்.
பாலஸ்தீனத்துக்கான இந்தியா வின் பிரதிநிதியான பி.எஸ்.முபாரக், பள்ளிக்கான நிதியை முஜாஹீத்திடம் வழங்கினார்.