வளைகுடா பகுதியில் ஈரானின் ராணுவப் பயிற்சி பொறுப்பற்ற செயல்: அமெரிக்கா விமர்சனம்

வளைகுடா பகுதியில் ஈரானின் ராணுவப் பயிற்சி பொறுப்பற்ற செயல்: அமெரிக்கா விமர்சனம்
Updated on
1 min read

வளைகுடா பகுதிகளில் ஈரானின் ராணுவப் பயிற்சி பொறுப்பற்ற செயல் என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.

“வளைகுடா கடற்பகுதியில் ஏவுகணைப் பயிற்சிகளையும், விமானப் பயிற்சிகளையும் ஈரான் செய்து வருகிறது. சர்வதேசக் கடல் பகுதியில் ஈரானின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என்று அமெரிக்க அரசுத் தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கேட்டுக் கொண்டார்.

அணு ஆயுதச் சோதனை தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இப்படித் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளானது. பொதுமக்கள் பலர் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in