Published : 28 Jul 2020 02:29 PM
Last Updated : 28 Jul 2020 02:29 PM

10 அகலப்பாதை ரயில் என்ஜின்களை வழங்கிய இந்தியா: நன்றி தெரிவித்த வங்கதேசம்

10 அகலப்பாதை ரயில் என்ஜின்களை வங்கதேசத்துக்கு இந்தியா வழங்கியதற்கு அந்நாட்டின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற ஒப்படைப்பு நிகழ்ச்சியில், வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரயில்வே மற்றும் வர்த்தகத் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் ஆகியோர், 10 அகலப்பாதை ரயில் என்ஜின்களைகளை வங்கதேசத்துக்கு மெய்நிகர் முறையில் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் சி. அங்காடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வங்கதேசத்தின் சார்பில், அந்நாட்டின் ரயில்வே அமைச்சர், முகமது நூருல் இஸ்லாம் சுஜன் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சர், டாக்டர். அபுல் கலாம் அப்துல் மோமென் ஆகியோர் ரயில் எஞ்சின்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ் வழங்கப்பட்ட இந்த ரயில் எஞ்சின்களின் ஒப்படைப்பு, வங்கதேசத்தின் பிரதமர், ஷேக் அசீனா இந்தியாவுக்கு அக்டோபர் 2019-இல் வருகை தந்த போது அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. வங்கதேச ரயில்வேயின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த ரயில் எஞ்சின்கள் இந்தியாவால் தகுந்த வண்ணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் செயல்பாடுகளில் அதிகரித்துள்ள அளவுகளை கையாள இந்த ரயில் எஞ்சின்கள் உதவும்.

இதுகுறித்து, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அபுல் கலாம் அப்துல் மோமென் கூறுகையில், வங்கதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி. இருதரப்பினரையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டு வரவும், உறுதியான இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் இது உதவும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x