காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தானின் உயரிய விருது

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தானின் உயரிய விருது
Updated on
1 min read

காஷ்மீர் பிரிவினைவாதத் தாலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் உயரிய குடிமைக் கவுரவ விருதான ‘நிஷான் - எ- பாகிஸ்தான்’ விருதை அளித்து கவுரவித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கி வரும் நிலையில் இந்தியாவை சீண்டுவதற்காகவே இந்த விருதை பிரிவினைவாதத் தலைவருக்கு வழங்கியிருப்பதாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹூரியத் கான்பரன்ஸிலிருந்து இவர் ஜூன் 29ம் தேதி விலகினார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதையடுத்து ஹூரியத் உறுப்பினர்கள் மவுனமாக இருப்பது குறித்து கிலானி தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் தலைமை பாகிஸ்தான் அரசு அரசியல் சட்டப்பிரிவு 370ம் பிரிவை நீக்கிய ஆகஸ்ட் 5ம் தேதியை கறுப்பு நாளாக அனுசரிக்கவும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை மோசமாகச் சித்தரிப்பதோடு காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு உயரிய இடம் கொடுத்து, இந்தியாவை விமர்சிப்பவர்களை ஆராதிக்கவும் திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in