ஜப்பானின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர் மரணம்

ஜப்பானின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர் மரணம்
Updated on
1 min read

ஜப்பானின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளரான கன்சாய் யமமோட்டோ உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

கன்சாய் யமமோட்டோவின் மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தார் இன்று (திங்கட்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து யமமோட்வின் மகள் மிராய் யமமோடோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தன்னை அன்பு மிக்கவர்கள் சூழ்ந்திருக்க, யமமோட்டோ இந்த உலகைவிட்டுப் பிரிந்தார். எனது பார்வையில் எனது தந்தை ஆக்கபூர்வமான மனிதர் மட்டும் அல்ல. அவர் இளகிய மனது படைத்தவர். அன்பானவர், உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவர்” என்று பதிவிட்டுள்ளார்.

யமமோட்டோ ஃபேஷன் துறையில் மிக நேர்த்தியான மற்றும் வித்தியாசமான ஆடைகளை உருவாக்கியதன் மூலம் பிரபலமடைந்தார். வண்ணமயமான அவரது ஆடைகளில் ஜப்பானின் பாரம்பரியமும் இடம்பெறத் தவறாது. இதன் காரணமாக அவர் படைப்புகள் தனித்துவம்மிக்கதாக இருந்தன. யமமோட்டோ படைப்புகளுக்குப் புகழ்பெற்ற விருதுகளும் கிடைத்தன.

ரத்தப் புற்றுநோய் காரணமாக கன்சாய் யமமோட்டோ மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

யமமோட்டோவின் மரணத்துக்கு பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in