

அமெரிக்காவில் 82 வயது சீக்கிய முதியவர் ஒருவரை இரும்பு உருட்டுக் கம்பியால் கொடூரமாக தாக்கிய அந்நாட்டைச் சேர்ந்தவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவில் சமையல் செய்துவிட்டு காலாற வெளியில் வந்த பியாரா சிங் என்பவரை அமெரிக்கரான கில்பெர்ட் கார்சியா பார்த்திருக்கிறார். அப்போது, தலைப்பாகை அணிந்திருந்த சிங்கை முஸ்லிம் என நினைத்துக்கொண்ட கார்சியா கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இரும்பு உருட்டு கம்பியால் தாக்கியதில் தலையில் காயம், விலா எலும்பு முறிவு, நுரையீரலில் பாதிப்பு என பல இன்னல்களுக்கு ஆளான சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 3 வாரம் சிகிச்சை எடுத்தார்.
2013-ம் ஆண்டு மே 5-ம் தேதி நடந்த இந்த சம்பவம், இன ரீதியிலான வெறுப்பினால் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை பிரெஸ்னோ மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஆல்வின் ஹாரெல் விசாரித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, கார்சியாவுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். “இப்படிப்பட்ட கொடூர வெறியுடன் தாக்கிய நபர் இயல்பான நபராக இருப்பார் என கருத முடிய வில்லை” என்றார் நீதிபதி ஹாரெல்.
இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய சமூகத் தவர் தரப்பு ஆர்வலரான இக் கிரெவல் கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் தலைப்பாகை அணிந்திருப்பது போல் பத்திரிகை களில் காட்டப்படு கின்றன. இதனால் தலைப்பாகை அணிந்த சீக்கியர்களை தீவிரவாதிகள் என்று கருதும் நிலை உள்ளது. பியாரா சிங்கை தாக்குவதற்கு முன்பு, முஸ்லிம்கள் பற்றி கார்சியா இழிவாக பேசியுள்ளார்.