

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேருக்குப் புதிதாகக் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 14 பேர் பலியாகினர். 52 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 35,988 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இதுவரை 1,225 பேர் பலியாகி உள்ளனர். 24,573 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கரோனா எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் கரோனா தொற்றை எதிர்கொள்வதில் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. எதிர்பார்த்ததை விட தொற்று எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், கந்தஹர், பம்பியான் ஆகிய நகரங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.