

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இஸ்ரேலின் மத்திய ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமின் ஆட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியும் , கரோனா பரவலை பெஞ்சமின் நெதன்யாகு சரியாக கையாளவில்லை என்றும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு, ஐந்தாவது முறையாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி ஏற்றார். இந்த நிலையில் நெதன்யாகுவின் ஆட்சியின் மீது ஊழல் புகார் கூறி கடந்த 6 மாதங்களாகவே இஸ்ரேலில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், இவை அனைத்தும் திட்டமிட்ட சதி என்றும் நெதன்யாகு மறுத்து வருகிறார்.
கரோனா பரவல்
இஸ்ரேலில் 57,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் பலியாகியுள்ளனர்.