சவுதியில் கரோனா பலி 2,635 ஆக அதிகரிப்பு

சவுதியில் கரோனா பலி 2,635 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

சவுதி அரேபியாவில் புதிதாக 34 பேர் கரோனாவுக்குப் பலியானதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 2,635 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுதியில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,635 ஆக அதிகரித்துள்ளது. சவுதியில் இதுவரை 2,60,394 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,13,490 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் மக்களுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் ஹஜ் பயணம் செய்ய ஜூலை 29 ஆம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in