Published : 22 Jul 2020 06:47 AM
Last Updated : 22 Jul 2020 06:47 AM

மஞ்சள் வைரஸை கொல்லும்: சீன ஆராய்ச்சியில் தகவல்

புதுடெல்லி

இயற்கையாகவே மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பதை அனை வரும் அறிவர். இந்நிலையில் மஞ்சளில் உள்ள ஒரு பொருள் சில வைரஸ்களை அழிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர்.

மஞ்சளில் குர்குமின் என்ற பொருள் காணப்படுகிறது. மஞ் சளின் நிறத்துக்கு காரணமான இந்த கலவை டிரான்ஸ்மிசிபிள் காஸ்ட்ரோஎன்டிரிடிஸ் வைரஸ் (டிஜிஇவி) என்ற பன்றிகளை தாக்கும் கரோனா வைரஸை அழிக்கும் திறமை கொண்டது என்று சீனாவில் இருந்து வெளி யாகும் ஜர்னல் ஆஃப் ஜெனரல் வைராலஜி இதழில் வெளியிட் டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த டிஜிஇவி வைரஸானது ஆல்பா கரோனா வைரஸ் வகையைச் சேர்ந்தது.

டிஜிஇவி வைரஸ் தொற்று பன்றிக் குட்டிகளில் டிரான்ஸ் மிசிபிள் காஸ்ட்ரோஎன்டிரிடிஸ் என்ற வைரஸ் மூலம் நோயை ஏற்படுத்துகிறது. இது வயிற்றுப் போக்கு, கடுமையான நீரிழப்பு, இறப்பு ஆகியவற்றை ஏற்படுத்து கிறது. இந்நிலையில் மஞ்சளில் காணப்படும் குர்குமின் கலவை யானது, வைரஸை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக செயல்படு கிறது. இது குர்குமினை வைத்து சோதனை செய்யும் போது குர்குமின் அதிக அளவு செல் கலாச்சாரத்தில் வைரஸ் துகள் களின் எண்ணிக்கையை குறைப் பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

டிஜிஇவி வைரஸை பல வழி களில் இந்த குர்குமின் அழிப் பதை ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். ஒரு செல்லுக்குள் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத் துவதற்கு முன்பு கொல்லுதல், வைரஸ் உறைக்குள் நுழை வதற்கு முன்பு அந்த வைரஸை செயலற்றதாக்குதல், வைரஸ் நுழைவு ஏற்படும் முன் அதன் செல்களின் வளர்சிதை மாற் றத்தை மாற்றுதல் என பல வழிகளில் குர்குமின் செயலாற்று வதைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து சீனாவிலுள்ள வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோ இன்ஜினீயரிங் ஆராய்ச் சியாளர் டாக்டர் லிலன் ஜி கூறியதாவது:

டிஜிஇவி வைரஸை செய லிழக்க வைப்பதில் குர்குமின் அதிக அளவில் செயலாற்று கிறது. டெங்கு வைரஸ், ஹெபடைட்டிஸ் பி, ஜிகா வைரஸ் போன்ற வைரஸ்களின் நகலெடுப்புகளையும் இந்த குர் குமின் தடுக்கிறது. தடுப்பு மருந் துகள் இல்லாத நிலையில் வைரஸ் நோய்களைத் தடுப் பதும், கட்டுப்படுத்துவதும் மிகப் பெரிய சவாலாக உள்ளது.

இவ்வாறு லிலன் ஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x