

அமெரிக்காவில் சமூக மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ. 90 கோடி முறைகேடு செய்த 3 இந்தியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர்களை குற்றவாளிகள் என டெட்ராய்ட் நீதிமன்றம் அறிவித்துள் ளது.
அமெரிக்காவில் பிஸியோ தெரபிஸ்டுகளாக பணியாற்றும் ஷாஜத் மிர்ஸா (43), ஜிகார் படேல் (30), மருத்துவர் னிவாஸ் ரெட்டி (38) ஆகியோர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 15 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 90.48 கோடி) மோசடி செய்துள்ளனர். 2008 முதல் 2011 வரை டெட்ராய்ட் நகரில் மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான சேவையை பெற்றுத் தருவதாகக் கூறி இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த டெட்ராய்ட் நீதிமன்றம், ஷாஜத் மிர்ஸா உள்ளிட்ட மூவரும் குற்ற வாளிகள் என அறிவித் துள்ளது. அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.