

ஜெர்மனியில் புதிதாக 249 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,01,823 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ராபர்ட் கோச் மருத்துவ மையம் தரப்பில், “ஜெர்மனியில் புதிதாக 249 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 202 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இதுவரை 2,01,823 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1,87,800 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினில்தான் கரோனா அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி, மே மாதம் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவை படிப்படியாகத் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும், கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியது. இந்த நிலையில் ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடங்களில் ஊரடங்கையும் ஜெர்மனி அமல்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 1 .4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். . 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.