

2019 டிசம்பர் மாதத்தில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எதிர்காலத்திலும் இதிலிருந்து முற்றிலும் விடுபடுவது கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில் உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா வைரஸ் இரட்டிப்படையும் போது தன்னை பிரதியெடுக்கும் போதும் ஒவ்வொன்றும் ஒரு புதிய துணை வகையாக இருப்பதால் ஒட்டுமொத்த உலகத்துக்கான வாக்சின் என்பது மிகமிகக் கடினமே என்றும் தொற்று நோய் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனாலும் வாக்சின் ‘லாபி’ இன்றைய நிலையில் பெருகி வருகிறது. இது ஒரு புறமிருக்க கரோனாவுக்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடிப்பதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவிட்-19 வைரஸுக்கு உலகம் முழுதும் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்து 6 லட்சத்து 4 ஆயிரத்து 917 ஆக உள்ளது.
அமெரிக்காவில் 140,103 பேர் பலியாகி யுள்ளனர். பிரேசில் அடுத்த இடத்தில் 78,772 , பிரிட்டனில் பலி எண்ணிக்கை 45,358 . மெக்சிகோவில் பலி எண்ணிக்கை 38,888, இந்தியாவில் பலி எண்ணிக்கை 26,828. ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 28,420 ஆக உள்ளது.
உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 44 லட்சத்து 25 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3கோடியே 8 லட்சத்து 33 ஆயிரத்து 271 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.