Published : 17 Jul 2020 09:16 PM
Last Updated : 17 Jul 2020 09:16 PM

தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்த ஐ. நா

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளாவிய பயங்கரவாதியாக ஐநா அறிவித்துள்ளது.

அல்-கைதாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவாக நிதியளித்தல், திட்டமிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது ஐநா பாதுகாப்புக் குழு தடைவிதித்துள்ளது.

ஐநா பாதுகாப்புக் குழு நேற்று ஐ.எஸ்.ஐ.எல் (டாஷ்) மற்றும் அல்-கைதா பொருளாதாரத் தடைகள் பட்டியலில் மெஹ்சுத்தை சேர்த்தது. அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது. அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிடும். தற்போது அவரை உலகளாவிய பயங்கரவாதியாகவும் ஐநா அறிவித்துள்ளது.

அல்-கைதாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்கு நிதியளித்தல், திட்டமிடல், உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதற்காக மெஹ்சுத் பட்டியலிடப்பட்டதாக ஐநா-வின் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

அல்-கைதாவுடனான தொடர்புக்காக தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஜூலை 29, 2011 அன்று தடைசெய்யப்பட்டது. தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் மெளலானா ஃபஸ்லுல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து, 2018 ஜூன் மாதம், மெஹ்சுத் அவ்வமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்கதுலக்கு அவ்வமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. 2010 மே 1 அன்று டைம்ஸ் சதுக்கத்தில் குண்டுவெடிப்பு முயற்சிக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது. 2010 ஏப்ரலில் பெஷாவரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு எதிராக பலதரப்பட்ட தாக்குதல்களை இவ்வமைப்புதான் நடத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x