

பிலிப்பைன்ஸில் 17 பேர் கரோனா வைரஸுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 1,814 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதார அமைச்சகம் தரப்பில், “ பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 1,814 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,660 பேருக்கு புதிதாக கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. பிலிப்பைன்ஸில் இதுவரை 63,001 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன.
உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.