Last Updated : 17 Jul, 2020 01:23 PM

 

Published : 17 Jul 2020 01:23 PM
Last Updated : 17 Jul 2020 01:23 PM

உலகிலேயே மிக அதிகம்: 2005 முதல் 2016-ம் ஆண்டுவரை இந்தியாவில் 27.30 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

கோப்புப்படம்

நியூயார்க்

உலகிலேயே மிக அதிகமாக, கடந்த 2005-06 முதல் 2015-16-ம் ஆண்டுவரை பன்முக வறுமைச் சூழலிலிருந்து 27.30 கோடி மக்களை இந்தியா மீட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிகமான மக்களை வறுமையிலிருந்து இந்த காலக் கட்டத்தில் மீட்டுள்ளது இந்தியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்(யுஎன்டிபி) மற்றும் ஆக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு தொடக்கம்(ஓபிஹெச்ஐ) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதில் 2000 முதல் 2009-ம் ஆண்டுவரை 75 நாடுகளில் 65 நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் பன்முக வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்டுள்ளன.

பன்முக வறுமைக் குறியீடு(எம்பிஐ) என்பது ஏழைகளின் அன்றாட வாழ்வு, சுகாதாரக் குறைவு, கல்வியறின்மை, போதுமான தரமான வாழ்க்கைத்தரம் இல்லாமை, வேலையின்மை, வன்முறை அச்சம், ஆபத்தான சூழலில், நோய் உண்டாக்கும் சூழலில் வாழுதல் போன்றவை இதில் அடங்கும். இந்த சூழலிலிருந்து மக்களை மீட்டெடுத்தலைத்தான் எம்பிஐ குறியீடு குறிக்கிறது.

பன்முக வறுமை சூழலிலிருந்து 65 நாடுகள் மக்களை மீட்டுள்ளன, இதில் 50 நாடுகள் ஏழ்மையிலிருந்து மட்டும் மீட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக இந்திய மட்டுமே 27.30 கோடி மக்களை கடந்த 2005 முதல் 2015ம் ஆண்டுக்குள் பன்முக வறுமைச் சூழலிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் மக்களை மீட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பெரும்பாலான குழந்தைகள் ஏழ்மை நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

.இதில் அர்மேனியா(2010-2016), இந்தியா (2005-2016), நிகரகுவா(2001-2012), வடக்கு மாசிடோனியா(2005-2011) ஆகிய நாடுகள் கடந்த 5.5 ஆண்டுகள் முதல் 10.5 ஆண்டுகளுக்குள் தங்கள் நாட்டில் இருந்த பன்முக வறுமைச் சூழலிலிருந்து மக்களை பாதியாகக் குறைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு தொடக்கம் இயக்குநர் சபினா அல்கிரே கூறுகையில் “கரோனா வைரஸ் தொற்றுக்கு முன் இருந்த இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் வறுமை சூழலிலிருந்து மக்கள் எவ்வாறு சிறப்பாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது.

ஆனால், கரோனா வைரஸ் தொற்றுக்கு பின் அதன் தாக்கத்துக்குப்பின் சூழல் மாறலாம். இந்தப் புள்ளி விவரங்கள் மக்களை வறுமையிலிருந்து மீட்டுவிட்டோம் எனும் புது நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால், கரோனா காலத்தில் குழந்தைகளுக்கான கல்வி பாதிப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

உலகில் 107 வளர்ந்து வரும் நாடுகளில் 130 கோடி மக்கள் அதாவது 22சதவீதம் பேர் பன்முக வறுமைச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வறுமைச் சூழலில் குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் 130 கோடி மக்களி்ல் பாதிப்பேர் அதாவது 65 கோடி மக்கள் 18 வயதைக்கூட நிறைவடையாதவர்கள். 10.70 கோடி 60 வயது மற்றும் 60 வயதுக்கும் அதிகமானவர்கள். இதில் 84.3 சதவீத பன்முக வறுமைச் சூழலில் வாழும் மக்கள் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியில் வாழ்க்கின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x