

பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆ பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தரப்பில் , ”பப்புவா கினியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலி 7.2 ஆக பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையை பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டது. இந்த நிலையில் ஒரு மணி நேரம் கழித்து ஆபத்து கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் போர்கோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 67 பேர் பலியாகினர். 500 பேர் காயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
ரிங் ஆஃப் பயர்
பசுபிக் கடலில் அமைந்துள்ள ரிங் ஆப் பயர் பகுதியில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளதால் நிலநடுக்கம் அதிகம் உணரப்படும் நாடாக இது அறியப்படுகிறது.