

இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவுப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் மற்றும் அதனைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் மாயமாகி உள்ளனர். 4,000க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்துத் தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு. இந்தோனேசியா மோசமான வெள்ளத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், வெள்ளம் காரணமாக காலாரா, டைபாய்ட் போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 66 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா பரவல்
இந்தோனேசியாவில் சுமார் 81,668 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,345 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.