Published : 29 Sep 2015 11:14 AM
Last Updated : 29 Sep 2015 11:14 AM

உலக மசாலா: மண்டையோடு இல்லாத குழந்தை!

அமெரிக்காவில் வசிக் கிறார்கள் பிரான்டன் புல், பிரிட்டானி தம்பதியர். ஜாக்சன் ஸ்ட்ராங் என்ற தங்களது மகனின் முதல் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்கள். ஜாக்சனைப் பார்த்து மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்தி ருக்கிறது. பிரிட்டானி கருவுற்றி ருந்தபோது, பரிசோதனையில் ஆன்என்செபலி (Anen cephaly) என்ற மண்டை யோடு குறைபாட்டுடன் குழந்தை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மண்டை யோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யச் சொன்னார்கள் மருத்துவர்கள்.

ஒருவேளை குழந்தை பிறந்தாலும் ஓரிரு வாரங்களில் மரணம் அடைந்துவிடும் என்றும் எச்சரித்தார்கள். பிரான்டனும் பிரிட்டானியும் கலந்து ஆலோசித்தார்கள். இறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள். ‘‘குழந்தை எவ்வளவு குறைபாட்டுடன் இருந்தாலும் அது எங்கள் குழந்தைதான். அதனால் குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் உறுதியுடன் இருந்தோம். குழந்தை நலமாகப் பிறந்தான். பாதி மண்டை மட்டும்தான் இல்லை.

குழந்தையைப் பார்ப்பவர்கள் எவ்வளவு நாள் தாங்கும் என்று எங்களிடமே இரக்கமற்ற முறையில் சொல்வார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் எங்கள் மகன் பிழைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடி வளர்த்தோம். இதோ முதல் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டான் ஜாக்ஸன்’’ என்கிறார் பிரான்டன். அமெரிக்காவில் 4900 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த மண்டையோடு பாதிப்பு குறைபாடு இருக்கிறது. அந்தக் குழந்தைகள் கருவிலேயோ, பிறந்த சில நாட்களிலேயோ உயிரிழந்துவிடுகின்றன. ஜாக்சன் மட்டுமே இதுவரை இருந்துவந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிந்திருக்கிறான்.

மெடிக்கல் மிராகிள்!

மனிதர்களைப் போலவே உங்கள் செல்ல நாய்களும் செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு ‘பெட்போட்’ என்ற கருவியை வாங்க வேண்டும். வீட்டில் நாயைத் தனியே விட்டுவிட்டு, வேலைக்குச் செல்லும்போது நாய் என்ன செய்கிறது, எப்படி இருக்கிறது என்ற கவலை வருவது உண்டு. பெட்போட் வாங்கி, நாய் இருக்கும் அறையில் வைத்துவிட வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை வாய்ஸ் மெசேஜ் மூலம் நாயை அழைக்க வேண்டும். நாய் அருகில் வந்தவுடன், கருவியில் இருந்து நாய்க்கான பிஸ்கட் வெளியே வரும். நாய் பிஸ்கெட்டைச் சாப்பிடும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு, உரிமையாளரின் மொபைல் போனுக்குச் சென்றுவிடும். எங்கிருந்தாலும் நாய் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

ம்… என்னத்தைச் சொல்றது…

ரஷ்யாவைச் சேர்ந்தவர் நிகிடா லெஸ்னோய். இவர் நடந்து வரும்போது எக்ஸ் ரே உருவம் நடந்து வருவது போலவே இருக் கிறது. டாட்டூ கலைஞரான நிகிடா, தன் முகத்தில் மண்டை ஓட்டைடாட்டூ வாகக் குத்தியிருக்கிறார். கறுப்பு கண், எலும்புகள், பெரியப்பற்கள் என்று மண்டையோட்டை அப்படியே வரைந்திருக்கி றார். சாலைகளில் செல்லும் போது பெரும்பாலான வர்கள் பயந்து, விலகியே செல்கிறார்கள். ‘‘என் அப்பாவைப் பார்த்துதான் டாட்டூ மீது ஆசை வந்தது. 15 வயதில் முதல் டாட்டூ குத்திக்கொண்டேன்.

18 வயதில் அதிபயங்கர டாட்டூவுக்கு மாறிவிட்டேன். என்னைப் பார்த்து பயந்து ஒதுங்குபவர்களுக்கு மத்தியில் சிலர் பாராட்டவும் செய்கிறார்கள். என் அம்மா முதலில் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். ஆனாலும் பிறரின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பவர் என்பதால் என்னை ஏற்றுக்கொண்டார். டாட்டூ குத்தும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கொடுப்பது வழக்கம். ஆனால் நான் மயக்க மருந்து எடுத்துக்கொள்ளவில்லை. முகத்தில் டாட்டூ குத்துவதற்கு முன் மருத்துவரைச் சந்தித்தேன். ரத்தத்தின் மூலம் வண்ணம் மூளைக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் வேண்டாம் என்றார். ஆனால் ஏற்கெனவே முகத்தில் டாட்டூ குத்திக்கொண்டவர்களின் அனுபவங்களைக் கேட்ட பிறகு துணிச்சலுடன் இறங்கினேன்’’ என்கிறார் நிகிடா.

என்ன சொன்னாலும் இது நல்லாவா இருக்கு நிகிடா?





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x