

தென் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் ஒரு மாதத்திற்குள் அரசு மருத்துவமனைகள் நிரப்பப்படலாம் என்று அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் கரோனாவால் அதிகப்படியான பாதிப்பை தென் ஆப்பிரிக்கா சந்தித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் தென்கொரியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கரோனா தொற்று எண்ணிக்கையில் பாதி தென் ஆப்பிரிக்காவில்தான் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்காவில் 2,98,292 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
மேலும், கரோனா பரவல் வேகமாகப் பரவி வருவதால் ஒரு மாதத்திற்குள் அனைத்து அரசு மருத்துவமனைகளும் நிரம்பலாம் என்று தென் ஆப்பிரிக்க அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் கரோனா தொற்று பாதிப்பில் மூன்றில் 2 பங்கு வெஸ்டர்ன் கேப் மாகாணத்தின் கேப்டவுன் நகரில் உள்ளவையாகும்.
கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.
இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.