ஐஃபோனுக்காக சிறுநீரகம் விற்க 2 சீன இளைஞர்கள் முயற்சி

ஐஃபோனுக்காக சிறுநீரகம் விற்க 2 சீன இளைஞர்கள் முயற்சி

Published on

புதிதாக சந்தைக்கு சந்துள்ள ஐஃபோன் 6எஸ்-ஐ வாங்க சிறுநீரகத்தை விற்பனை செய்ய சீனாவைச் சேர்ந்த இளைஞர்கள் முயற்சித்துள்ளனர்.

வூ மற்றும் ஹுஆங் ஆகியோர் நண்பர்கள். இருவரும் ஐஃபோன் 6எஸ்-ஐ பெற வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அதற்கான பணம் இல்லாததை அடுத்து இருவரும் தங்களது சிறுநீரகத்தில் ஒன்றை ஆன்லைனில் விற்க தரகர்களை தேடியுள்ளனர். அதன்படி, மருத்துவ பரிசோதனைக்கு இருவரும் சென்ற நிலையில், சிறுநீரக தரகர் கூறியபடி அந்த இடத்துக்கு வரவில்லை.

இதனை அடுத்து சிறுநீரகத்தை விற்க வேண்டாம் என்று வூ அறிவிறுத்தியுள்ளார். ஆனால் இதனைக் கேட்காத ஹுஆங் சிறுநீரகத்தை விற்று ஐஃபோன் வாங்கி வருவதாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காணாமல் போன அவரை கண்டுபிடிக்க முடியாத வூ, இது குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஹுஆங்கை போலீஸார் தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in