பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கரோனா: பலி எண்ணிக்கை 72,000 என்ற எண்ணிக்கையை கடந்தது

பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கரோனா: பலி எண்ணிக்கை 72,000 என்ற எண்ணிக்கையை கடந்தது
Updated on
1 min read

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கரோனாவுக்கு 630 பேர் பலியாக அங்கு மொத்தமாக பலி எண்ணிக்கை 72,151 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 66 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று பிரேசிலில் புதிய கரோனா தொற்று எண்ணிக்கை 39,000 என்று தெரிவித்திருந்தது. அன்று 1071 பேர் பலியாகினர்.

வெள்ளிக்கிழமையன்று 1,200 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 13 ஆயிரத்து 512 ஆக உள்ளது.

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,37, 782 ஆக அதிகரிக்க இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இந்தியா 879,487 பாதிப்புகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்து 17 ஆயிரத்து 84.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in