Published : 10 Jul 2020 08:11 AM
Last Updated : 10 Jul 2020 08:11 AM

பிரபல சர்வதேச நிறுவனங்களை ஆளும் 58 இந்திய நிர்வாகிகள்

வாஷிங்டன்

அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட உலகின் 11 நாடுகளில் பல முன்னணி நிறுவனங்கள் 58 இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பல திறமை வாய்ந்த நபர் களில் 58 பேர் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் பல முக்கிய நிறுவனங்களில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளனர். இந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி டாலர் அளவில் உள்ளது. இந்நிறுவனங்களின் வருவாய் ஒரு லட் சம் கோடி டாலர். இவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 36 லட்சம்.

அமெரிக்காவில் செயல்படும் இந்திய புலம்பெயர் அமைப்பு வெளியிட் டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியர்கள் பல தரப்பட்ட துறைகளைச் சார்ந்த நிறு வனங்களின் உயரிய பதவிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர் களின் பதவிக் காலத்தில் இந்நிறுவனங் களின் ஆண்டு வருவாய் 23 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. எஸ் அண்ட் பி 500 பட்டியல் நிறுவனங்களின் வளர்ச்சியைக் காட்டிலும் இவை 10 சதவீதம் கூடுதல் வளர்ச்சியாகும்.

இந்தியப் புலம்பெயர் அமைப்பின் நிறுவனர் ரங்கசாமி இதுகுறித்து கூறு கையில், ‘‘இந்தியப் பூர்வகுடி மக்கள் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் மிக உயரிய இடங்களை அடைந்திருப்ப தோடு மகத்தான சாதனைகளையும் படைத்துக் கொண்டிருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்’’ என்று கூறுகிறார்.

கூகுள் சுந்தர் பிச்சை, பெப்சி இந்திரா நூயி, ஹர்மான் தினேஷ் பாலிவால், மாஸ்டர் கார்டு அஜய் பங்கா, வெர்டெக்ஸ் பார்மா ரேஷ்மா கெவால் ரமணி என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பலர் மிக இளவயதிலேயே உயரிய பதவி களை எட்டியிருக்கிறார்கள். உயர் பதவி களை வகிக்கும் இந்திய நிர்வாகிகளின் குறைந்தபட்ச வயது 37 ஆகவும் அதிக பட்ச வயது 74 ஆகவும் இருக்கிறது. இவர்களின் சராசரி வயது 54 ஆக இருக்கிறது. 58 இந்திய நிர்வாகிகளில் 5 பேர் மட்டுமே பெண்கள்.

மேலும் இந்திய நிர்வாகிகள் கரோனா பாதிப்பு காலத்தில் தங்களின் நிறுவனங்கள் சார்பாக பல மனிதநேய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்தியர்கள் தொழில் ரீதியிலும் சமூக ரீதியிலும் உலகம் முழுவதும் தங்க ளுடைய திறமையையும் பாரம்பரியத் தையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் கள் என்று பெருமையுடன் இந்தியப் புலம்பெயர் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x