படங்கள் 10- அகதிகளை நெகிழவைத்த ஜெர்மனியின் வரவேற்பு

படங்கள் 10- அகதிகளை நெகிழவைத்த ஜெர்மனியின் வரவேற்பு
Updated on
2 min read

சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள காரணத்தால், அங்கு வாழும் மக்கள் அகதிகளாகி, பல்வேறு நாடுகளைத் தஞ்சம் கோரி வருகின்றனர். கடல் மார்க்கமாக பயணித்து கிரீஸ், இத்தாலி நாடுகளில் கரையேறுபவர்களுக்கு அந்நாடுகள் இடம் அளிக்க மறுத்து வருகின்றன.

ஆனால் ஜெர்மனி மட்டும் அகதிகள் அனைவருக்கும் அடைக்கலம் அளித்துவருகிறது. கணக்கில்லாத உணவுப் பொருட்களையும், இனிப்புகளையும் வழங்குகிறது. குழந்தைகளுக்கு பொம்மைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

சிரியாவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான அகதிகளை வரவேற்கும் ஜெர்மனி சமூக ஆர்வலர்கள்.

கடந்த சனிக்கிழமையன்று 8,000 அகதிகளும், ஞாயிறன்று 6,000 அகதிகளும் ஜெர்மனிக்கு வந்திறங்கினர்.

சிறுமி ஒருத்திக்கு பொம்மை, பிஸ்கட், உணவு மற்றும் பலூன் ஆகியவற்றைக் கொடுக்கும் தன்னார்வலர்.

'சத்தமாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள்; இங்கே அகதிகள் வரவேற்கப்படுகின்றனர்!'- ஃப்ராங்க்ஃபர்ட் ரயில் நிலையத்தில் உற்சாகமாக வந்திறங்கிய அகதி முத்தமிடுகிறார்.

ரயிலை விட்டிறங்கிய அகதிகளை, பொதுக்கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக குடியிருப்புகளை நோக்கிச்செல்லும் பேருந்துகளுக்குச் செல்ல வழிகாட்டுகின்றனர் காவல்துறையினர்.

அகதிகளை எப்போதுமே வரவேற்கும் ஜெர்மனிக்கு இந்தாண்டு 8,00,000 பேர் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கலின் அகதிகள் அனுமதிப்பை மகிழ்ச்சியோடு ஏற்று அவரின் புகைப்படத்தைக் கையில் ஏந்தியிருக்கும் அகதி.

மியூனிக் ரயில் நிலையத்தில், வந்திறங்கும் பயணிகளுக்காக, அரபி பேசும் 90 உதவியாளர்களுடன் காத்திருக்கும் ஆடை, செருப்புகள்.

'நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்; நாங்கள் ஜெர்மனி செல்கிறோம்'- ஏறக்குறைய அனைத்து சிரிய மக்களின் உணர்ச்சிப்பூர்வக் கருத்து இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in