

ஜப்பானின் மத்தியப் பகுதியில் உள்ள சுற்றுலாத்தளமான ஜிபு பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், “ஜப்பானின் ஜிபு பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ள இப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வருடங்களில் இல்லாத அளவு மழை பதிவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து ஜப்பான் வானிலை மையம் கூறும்போது, “ஜூலை 12 ஆம் தேதிவரை கனமழை நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடக்கியுள்ளது.
ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் 40க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
ஜப்பானில் கரோனா பரவல்
ஜப்பானில் இதுவரை சுமார் 20,174 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,331 பேர் குணமடைந்த நிலையில் 980 பேர் பலியாகி உள்ளனர்.