Last Updated : 07 Jul, 2020 08:59 AM

 

Published : 07 Jul 2020 08:59 AM
Last Updated : 07 Jul 2020 08:59 AM

சீனாவை எங்கும் அதிகாரம் செய்யவிடமாட்டோம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவம் துணை நிற்கும்: வெள்ளை மாளிகை அதிகாரி சூசகம்

கோப்புப்படம்

வாஷிங்டன்


இந்தியா, சீனா இடையிலான மோதல் மட்டுமல்லாமல் எந்த நாட்டின் பிரச்சினையிலும் வலிமையான நட்புறவுக்கு அமெரிக்க ராணுவம் தொடர்ந்து துணை நிற்கும், என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனாவை அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதேசமயம் கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையிலான மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தென் சீனக் கடலில் பல தீவுகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வருகின்றன.

சீனாவுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில் தென் சீனக் கடல் பகுதிக்கு இரு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து கூறியதாவது:

வெள்ளைமாளிகை தலைமை அதிகாரி மார்க் மிடோஸ் : கோப்புப்படம்

“ ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறுவிடுகிறோம். ஆசியாவில் இருந்தாலும் சரி அல்லது ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்தாலும் சரி. எந்த நாடும் தங்களை சக்தி வாய்ந்தவராக வெளிப்படுத்த மற்ற நாடுகளை அடக்கி, தங்களின் ஆதிக்கத்தை செலுத்தினால் அது சீனாவாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும்சரி அதற்கு நாங்கள் துணை நிற்கமாட்டோம்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் மோதலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும்சரி, எங்கள் ராணுவம் நட்புறவுக்கு வலுவாக நிற்கும், தொடர்ந்து வலுவாக நிற்கும்.

கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக சீனாவின் செல்போன் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை.

எங்களின் இரு விமானம் தாங்கி கப்பல்களான ரொனால்ட் ரீகன், நிமிட்ஸ் ஆகியவற்றை தென் சீனக் கடலுக்கு அனுப்பியுள்ளோம். தென் சீனக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அறிவோம். மிகப்பெரிய ராணுவப்படை, வலிமையான சக்தி எங்களிடம் இருக்கிறது என்பதை உலகம் அறியவே அந்த படைகளை நாங்கள் அனுப்பியுள்ளோம்.

அமெரி்க்கா ராணுவத்தின் வளர்ச்சிக்காக அதிபர் ட்ரம்ப் ஏராளமான பணிகளைச் செய்துள்ளார். ஆயுதங்கள் உருவாக்கியது மட்டுமல்லாமல், படைக்கு ஆண்கள், பெண்களை தியாகஉணர்வோடு சேர்த்ததில் அவரின் பங்கு முக்கியம். அதைத் தொடர்ந்து செய்வார்

இவ்வாறு மீடோஸ் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x