பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கரோனா

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கரோனா
Updated on
1 min read

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் மூத்த அரசியல்வாதியும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஷா மெஹ்மூத் குரேஷி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ''எனக்குக் கோவிட்-19 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லாவின் கருணையால் உற்சாகமாகவும் வலிமையுடனும் இருக்கிறேன். வீட்டில் இருந்து என்னுடைய பணிகளைத் தொடர்வேன். உங்களின் பிரார்த்தனைகளை எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவரான குரேஷி, பிரதமர் இம்ரான்கானுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானில் கருதப்படுகிறார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சூழலில் ஊரடங்கை அமல்படுத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in