

பாக்தாத் நகரின் நெரிசலான பகுதியில் உள்ள மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
பாக்தாத் மையப்பகுதியில் உள்ள ஷோர்ஜா சந்தையில் உள்ள ஷியா முஸ்லிம் பிரிவினர் வழிபாடு நடத்தும் மசூதியில் இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் 29 பேர் படுகாயமடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்கொலைத் தாக்குதல் செய்த நபர் பெல்ட்டில் கட்டியிருந்த பயங்கர வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததில் மசூதியே ரத்தக்களறியாகியுள்ளது. கண்ணாடிகள் ஆங்காங்கே சிதறியது.
மேலும் பாக்தாத் நகரின் காய்கனி சந்தையில் ஒரு குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகி, 5 பேர் காயமடைந்துள்ளனர்.இது தவிர டோரா மாவட்டத்தில் போலீசார் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 2 போலீசார் பலியானதோடு 6 பேர் படுகாயமடைந்தனர்.
அல்கய்டா அமைப்பின் ஈராக் பிரிவு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.