Published : 02 Jul 2020 02:50 PM
Last Updated : 02 Jul 2020 02:50 PM

2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடர மக்கள் ஆதரவு

ரஷ்யாவின் அதிபராக புதின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்க முடியாது. இந்த நிலையில் புதின் ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க நபராகத் தொடர்வதால், அவரை அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் மக்களது விருப்பத்தை அறிய இது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் நடந்தது. இதில் 77.93% பேர் ரஷ்ய அதிபராக புதின் 2036 ஆம் ஆண்டுவரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6% பேர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடர இருக்கிறார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வாக்கெடுப்பு பொய்யானது என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

கடந்த 1999-ல் அப்போதைய ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின், அன்றைய பிரதமர் செர்ஜி ஸ்டாபாசினைp பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியின் முன்னாள் உளவாளி விளாடிமிர் புதினை பிரதமராக அவர் நியமித்தார்.

1999 டிசம்பரில் போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செயல் அதிபராக புதின் பொறுப்பேற்றார்.

2008-ல் பிரதமராகப் பதவியேற்றார் புதின். பின்னர் 2010 மார்ச்சில் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் மீண்டும் அதிபர் ஆனார். 4-வது முறையாக ரஷ்யாவின் அதிபரான புதினின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு முடியும் நிலையில், தற்போது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x