பிரேசிலில் ஒரே நாளில் 33,846 பேர் கரோனாவால் பாதிப்பு

பிரேசிலில் ஒரே நாளில் 33,846 பேர் கரோனாவால் பாதிப்பு
Updated on
1 min read

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 33,846 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் அதிகபட்ச தொற்று பாதிப்பு இதுவாகும். நேற்று பிரேசிலில் 24,052 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பிரேசிலில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை பிரேசிலில் சுமார் 14,02,041 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 59,594 பேர் பலியாகி உள்ளனர். 7,90,000 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

கரோனா விவகாரத்தை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா சரியாகக் கையாளவில்லை என்று சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும்வரை சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மட்டுமே தற்போதைக்குத் தீர்வு என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in