மாஸ்க் அணிவது ட்ரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம்: வெள்ளை மாளிகை விளக்கம்

மாஸ்க் அணிவது ட்ரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம்: வெள்ளை மாளிகை விளக்கம்
Updated on
1 min read

மாஸ்க் அணிவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம் என்று வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லீ கூறும்போது, “மாஸ்க் அணிவது ட்ரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம். மாஸ்க் அணிவது, அணியாதது தனிநபரின் விருப்பம். மக்கள் அவர்களது பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவதை ட்ரம்ப் ஆதரிக்கிறார். மேலும் அவர் மாஸ்க் அணிவதில் எந்தப் பிரச்சனையும் தனக்கு இல்லை என்று என்னிடம் கூறினார்” என்றார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் தற்போது அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கிறார். இவர், நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்காக அமெரிக்காவின் பல மாகாணங்களில் தீவிரத் தேர்தல் பிரச்சாரமும் செய்து வருகிறார் . இந்த நிலையில் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் மாஸ்க் அணியாதது குறித்து விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 26,83,239 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை மட்டுமே தற்போதுவரை மருத்துவர்களால் ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in