கம்போடியாவில் சுற்றுப்பயணம்: அங்கோர்வாட் கோயிலில் ஹமீது அன்சாரி

கம்போடியாவில் சுற்றுப்பயணம்: அங்கோர்வாட் கோயிலில் ஹமீது அன்சாரி
Updated on
1 min read

கம்போடியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, அங்குள்ள உலகப் புகழ் பெற்ற இந்து கோயிலான அங்கோர்வாட்டுக்கு நேற்று சென்றார்.

மூன்று நாள் பயணமாக கம்போடியாவுக்கு சென்றுள்ள அன்சாரி, தலைநகர் நாம்பென்னி லிருந்து நேற்று சீம் ரீப் மாகாணத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள மெகாங்-கங்கா டெக்ஸ் டைல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். மெகாங் கங்கா ஒத்துழைப்பு (எம்ஜிசி) அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 10 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கி இருந்தார்.

பின்னர் அங்கிருந்து கட்டிடக் கலை ரீதியாகவும், கலையம்சங் களுடனும் விளங்கும் அங்கோர் வாட் கோயிலுக்கு சென்று பார்வை யிட்டார். இந்தக் கோயிலின் தோற்றத்தில் பிஹார் மாநிலத்தில் ஒரு கோயில் கட்டப்படும் என ஒரு தனியார் அறக்கட்டளை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதற்கு கம்போடியா எதிர்ப்பு தெரிவித்தது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உலக பாரம்பரிய சொத்தாக விளங்கும் அங்கோர்வாட் கோயிலைப் போன்ற கோயில் கட்டுவது விதிகளுக்குப் புறம்பானது என கம்போடியா தெரிவித்தது.

ஹமீது அன்சாரி கம்போடி யாவுக்கு செல்வதற்கு முன்பு, பிஹாரில் அங்கோர்வாட் போன்ற கோயில் கட்டப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என அந்த நாட்டுக்கு மத்திய அரசு சமாதானம் செய்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in