எல்லைப் பிரச்சினை; இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்: பிரிட்டன் வலியுறுத்தல்

எல்லைப் பிரச்சினை; இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்: பிரிட்டன் வலியுறுத்தல்
Updated on
1 min read

எல்லைப் பிரச்சினையை இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சீன ராணுவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் அதை வெளிப்படையாக அறிவிக்க சீன ராணுவம் மறுக்கிறது. ஆனால், சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க சீன, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் இந்தியா - சீனாவுக்கு உதவத் தயார் என்று அமெரிக்கா கூறிவந்த நிலையில், இந்தியா -சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறும்போது, “கல்வான் பகுதியியில் நிலவும் சூழல் வருத்தம் தரக்கூடியதாக உள்ளது. இரு நாட்டினரும் பேச்சுவார்த்தையின் மூலம் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதே சிறந்த முடிவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா மோதல் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்முதலாகக் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in