

ஜெர்மனியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகை 1,92,079 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி அதிகாரிகள் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 630 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,92,079 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,000க்கும் அதிகமானவர்கள் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர், 1,76,000 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெர்மனி கடந்த மாதம் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை படிப்படியாக திறக்க அனுமதி அளித்தது. மேலும் மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியது.
இந்த நிலையில் மீண்டும் ஜெர்மனியில் சில இடங்களில் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 90 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,82,000 பேர் உயிரிழந்துள்ளனர்.