

உலகின் 6வது சர்வதேச யோகா தின அனுசரிப்புகளைத் தொடர்ந்து உலகின் முதல் யோகா பல்கலைக் கழகம் இந்தியாவுக்கு வெளியே அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செலஸில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பண்டைய யோக மரபுடன் விஞ்ஞானக் கொள்கைகளையும் நவீன ஆராய்ச்சி அணுகுமுறைகளையும் இணைத்து அங்கு யோகா வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதனை செவ்வாயன்று மத்திய அமைச்சர் வி.முரளீதரன், வெளிவிவகாரத்துறை நிலைக்குழு தலைவர் பி.பி.சவுத்ரி ஆகியோரால் சேர்ந்து திறந்து மெய்நிகர் நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தில் நடைபெற்றது.
இந்திய யோகா குரு டாக்டர் ஹெ.ஆர்.நாகேந்திரா இந்த பல்கலைக் கழகத்தின் முதல் வேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மெய்நிகர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய முரளிதரன், சுவாமி விவேகானந்தா உலகளாவிய சகோதரத்துவம் என்ற செய்தியை அமெரிக்காவிலிருந்து அளித்தார். இந்தியாவுக்கு வெளியே உலகில் முதல் யோகா பல்கலைக் கழகம் மூலம் யோகாவின் செய்தி அமெரிக்காவிலிருந்து உலகத்துக்கு ஒலிபரப்பப்படுகிறது.
இந்தியப் பண்பாட்டின் குறியீடடு, பாரம்பரியாமான யோகா ஒற்றுமை மற்றும் சகதோரத்துவத்தை அடையும் வழிமுறையாக மாறியுள்ளது. யோகா மூலம் நாம் உலக அமைதியை நிலைநாட்ட முடியும். மன சமநிலையையும் உணர்வு நிலைத்தன்மையையும் யோகா வழங்குகிறது என்றார்.
பிரதமரின் யோகா ஆலோசகரான நாகேந்திரா பேசும்போது சுவாமி விவேகானந்தா சிகாகோவில் 1893-ம் ஆண்டு பேசிய அந்த பிரபலமான உரையில் இந்திய யோகாவின் பரிமாணங்களையும் கம்பீரங்களையும் உரைத்தார்.
அவரது போதனைகள் மற்றும் தீர்வுகள் மூலம் ஊக்கம் பெற்று நவீன கால சவால்களை நம்மால் சந்திக்க முடியும். அதற்காகவே கல்வியியல் பரிமாணத்திற்கு யோகாவை இந்த நடைமுறைகள் மூலம் கொண்டு வந்துள்ளோம்.
இந்தப் பல்கலைக் கழகம் கீழைத்தேயங்களின் சிறந்தனவற்றையும், மேற்கின் சிறந்ததையும் இணைக்கிறது. கீழைத்தேயத்தின் சிறந்தது யோகாவாகும் மேற்குலகின் சிறந்தது நவீன விஞ்ஞான் அணுகுமுறையாகும்.
ஒருங்கிணைந்த சுகாதாரத்தை உலகம் முழுதும் கொண்டு வர விரும்புகிறோம். அதாவது அலோபதி, ஆயுஷ் சிகிச்சை முறைகள் அதாவது யோகா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், உனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு பரிமாணத்தை கொண்டு வர விரும்புகிறோம், என்றார்.
நியூயார்க்கில் உள்ள தலைமை இந்தியத் தூதுவர் சந்தீப் சக்ரவர்த்தி, “நியூயார்க்கிற்கும் யோக மரப்புக்கும் ஆழமான பிணைப்பு உள்ளது, சுவாமி விவேகானந்தா இந்த நகரில் சில காலம் வசித்து யோகா குறித்த நூல்களை எழுதியுள்ளார், அதுதான் இந்திய யோகாவை உலகம் முழுதும் பரப்ப உதவியது.
யோகாவை அமெரிக்கா தத்தெடுக்க இது உதவியது, இதற்காக பாடுபட்ட நாகேந்திரா, பந்தாரி ஆகியோரை பாராட்டுகிறேன், என்றார்
அமெரிக்காவில் சுமார் 4 கோடி மக்கள் யோகாவை தினப்படி பயிற்சி செய்வதாக சந்தீப் தெரிவித்தார்.
பந்தாரி பேசும்போது, மேற்குலகிற்கு இந்து மதத்தை அறிமுகம் செய்தவர் விவேகானந்தர். சிகாகோவில் 1893ம் ஆண்டு நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரைமூலம் அவர் இந்து மதத்தை பரப்பினார். இப்போது 127 ஆண்டுகள் சென்று இன்னொரு ரிஷி டாக்டர் ஹெச்.ஆர். நாகேந்திரா மேற்குலகிற்கு இதனை மீண்டும் அழைத்து வந்துள்ளார். குரு-சிஷ்ய பாரம்பரியத்தையும் இந்த பலகலைக் கழகம் மூலம் மேற்குலகிற்குக் கொண்டு வந்துள்ளார்.
விவேகானந்தா பல்கலைக் கழகம் நவீன உலகின் சிறந்த யோகா பயிற்றுநர்களை உருவாக்கி அவர்கள் அமைதியை மட்டுமல்லாது பூமியை வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக மாற்றவும் செய்வார்கள், என்றார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறும்போது, சோதனையான இந்தக் காலக்கட்டங்களில் யோகப் பயிற்சி வாழ்க்கையை ஆரோக்கியாக வாழ உதவும், யோகாவை விஞ்ஞானரீதியாக புதுப்பிப்பதன் மூலம் கோடிக்கணக்கானோர் பயனடைவார்கள். இந்தியாவுக்கு வெளியே யோகா பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது ஒரு பெரிய மைல்கல் சாதனையாகும் என்றார்.
யோகா குரு பாபா ராம்தேவ் கூறும்போது, யோகா பல்கலைக் கழகம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பெருமையளிக்கக் கூடியதாகும், விவேகானந்தா பல்கலைக் கழகம் வரும் காலங்களில் யோகா ஆய்வில் இந்தியாவை நிச்சயம் பெருமைப்படுத்தும், என்றார்.