

சிறுபான்மையினரான செர்பியர்களுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கும் புதிய ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் கொசோவா நாட்டு பிரதமர் இசா முஸ்தபா பேசிய போது எம்.பி.க்கள் அவர் மீது மூட்டை வீசி தாக்குதல் நடத்தினர்.
கொசோவா நாட்டு தொலைக்காட்சியில் பிரதமரின் பேச்சு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பிரதமர் பேசிய போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, இசா முஸ்தபாவின் மெய்க்காவலர் ஓடிவந்து குடை பிடித்து முட்டைவீச்சிலிருந்து பிரதமரைக் காத்தார்.
அவைத் தலைவர் காத்ரி வெசேலி அமர்வை உடனடியாக நிறுத்தினார், எதிர்க்கட்சி எம்.பி.க்களை நோக்கி அவர் கடுமையாக கூச்சலிட்டார்.
செர்பிய மாநகராட்சிகள் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் முடிவை எதிர்த்தே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர்.