Published : 19 Jun 2020 09:07 PM
Last Updated : 19 Jun 2020 09:07 PM

கரோனா நிலவரம்: உலகம் முழுவதும்  86,21,747 பேர் பாதிப்பு;  45, 64,954 பேர் குணமடைந்துள்ளனர்

உலகம் முழுவதும் சுமார் 86,21,747 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கரோனா குறித்த தரவுகளை வெளியிடும் வேல்டோமீட்டர்ஸ் (Worldometers) இணையதளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வோல்டோ மீட்டர்ஸ் இணைய தளம் தரப்பில் , “உலகம் முழுவதும் இதுவரை 86,21,747 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,57,338 சுமார் பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 45, 65,421 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவில் கரோனாவால் 22, 65,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,20,723 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 9,84,315பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,897 பேர் பலியாகி உள்ளனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால்,பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x