கரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 82,64,468 பேர் கரோனாவால் பாதிப்பு

கரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 82,64,468 பேர் கரோனாவால் பாதிப்பு
Updated on
1 min read

உலகம் முழுவதும் சுமார் 82,64,648 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “ உலகம் முழுவதும் இதுவரை 82,64,468 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,39,198 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 43,21,498 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவில் கரோனாவால் 22,08,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,132 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 9,28,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,456 பேர் பலியாகி உள்ளனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in