Published : 16 Jun 2020 06:58 PM
Last Updated : 16 Jun 2020 06:58 PM

குழந்தைகளுக்கு ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது: ஐ.நா.

குழந்தைகளுக்கு ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்ட அறிக்கையில், “2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் சுமார் 3,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தேர்தலில் நிறைய வன்முறைகள் அரங்கேறியுள்ளன. இதில் பெரும்பாலான தாக்குதல்கள் தலிபான்களால் நடத்தப்பட்டுள்ளன. அரசுப் படைகள் தாக்குதல்களாலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கு ஆபத்தான நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களது நிபந்தனைகளை ஏற்பதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆப்கன் அரசு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது அதிபர் அஷ்ரப் கானிக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x