பிரேசிலில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா மரணங்கள்

பிரேசிலில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா மரணங்கள்
Updated on
1 min read

கரோனா தொற்று ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, பிரேசிலில் கரோனாவுக்கான பலி எண்ணிக்கை 43,000-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பிரேசிலில் கரோனா தொற்று 24 மணிநேரத்தில் 17,110 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,67,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 612 பேர் பலியாகினர். தற்போது பிரேசிலில் கரோனாவுக்கு 43,332 பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புகளை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா அலட்சியம் காட்டி வந்தார். மேலும் பிரேசிலில் மொத்தம் உள்ள 27 மாநிலங்களில், 24 மாநிலங்கள் மட்டுமே தனிமனித இடைவெளியை அமல்படுத்தின. ஆனால், மாநிலங்களின் இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றே பிரேசில் அதிபர் பேசி வந்தார்.

கரோனா தொற்று காரணமாக பிரேசிலில் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பிரேசிலில் முக்கிய வணிகப் பகுதியான ரியோ டி ஜெனிராவில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் நிரந்தரமாக மூடும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக மோசமான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நலவாரிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in