Published : 14 Jun 2020 04:16 PM
Last Updated : 14 Jun 2020 04:16 PM

ஆட்டிப்படைக்கும் கரோனா; உலக அளவில் அதிகம் பாதித்த 10 நாடுகள் பட்டியல்

நியூயார்க்

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 7,895,777 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 432,882 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 4,056,063 பேர் சிகிச்சை முடிந்து கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.


அமெரிக்கா தொடர்ந்து கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் சுமார் 20,74,082 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,13,803 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து 8,50,514 பேர் பாதிப்புடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலை அடுத்து ரஷ்யா உள்ளது.

ரஷ்யா 516458
இந்தியா 32126,
பிரிட்டன் - 295828,
ஸ்பெயின்- 233605
இத்தாலி- 236651
ஈரான்- 184955
பாகிஸ்தான்- 132406
சீனா- 84229

ஆகிய நாடுகள் அதிக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக சில நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x