Published : 14 Jun 2020 10:49 AM
Last Updated : 14 Jun 2020 10:49 AM

அமெரிக்காவில் பிழைத்த கரோனா நோயாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி: மருத்துவமனை பில் தொகை 11 லட்சம் டாலர்கள்

அமெரிக்காவில் 70 வயது கரோனா நோயாளி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி கடைசியில் தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்தார், ஆனால் மருத்துவமனை பில் அவருக்கு மாரடைப்பை ஏற்படுத்தாதது ஆச்சரியமே என்று கூறப்படுகிறது.

ஆம்! மைக்கேல் ஃபுளோர் என்ற அந்த நபர் மார்ச் 4ம் தேதி வாஷிங்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 62 நாட்கள் அவருக்கு கரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில் இவர் மரணமடைந்து விடுவார் என்ற தருணத்தில் நர்ஸ்கள் இவரது செல்பேசியில் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்தார், கடைசி பிரியாவிடை அளிக்க.

ஆனால் இவர் அதிசயமாகக் குணமடைந்து மே 5ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு அதன் பிறகுதான் அதிர்ச்சிக் காத்திருந்தது மருத்துவமனை பில் ஒரு நோட்டுப்புத்தக சைஸில் 181 பக்கங்கள் கொண்டிருந்தது. 11 லட்சத்து 22 ஆயிரத்து 501 டாலர்கள் இவர் செலுத்த வேண்டும், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.8 கோடியே 35 லட்சத்து 52,700 ஆகும்.

இதில் தீவிர சிகிச்சைப் பிரிவு நாளொன்றுக்கு 9,736 டாலர்கள் தீட்டியுள்ளது. வெண்ட்டிலேட்டர் பயன்பாட்டுக்கு 82,000 டாலர்கள், அவர் மரணமடைந்து விடுவார் என்ற ஆபத்தான கட்ட சிகிச்சைக்காக 2 நாட்களில் ஒரு லட்சம் டாலர்கள் என்று தீட்டியிருந்தது.

ஆனால் ஃப்ளோரின் அதிர்ஷ்டம் அவருக்கு அரசு மெடிகேர் காப்பீடு உதவியது. ஆனால் ப்ளோர் வரிசெலுத்துவோரின் பணம் தனக்காக பயன்படுத்தப்பட்டது தனக்கு குற்ற உணர்வை உருவாக்குகிறது என்றார்.

எப்படியோ ஃப்ளோர் தன் பர்சை எடுக்கவில்லை என்று டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

-ஏ.எஃப்.பி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x