

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம்முக்கும் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெற்றது, ஆனால் இதனால் ஒரு பயனும் இல்லை என்று சாடிய வடகொரியா, அந்தப் பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு உறவில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வடகொரிய வெளியுறவு துறை அமைச்சர் ரி சோன் குவோன் தெரிவித்ததாவது:
சிங்கப்பூரில் நடைபெற்ற ட்ரம்ப்-கிம் சந்திப்பு போல் இனி நடைபெற வாய்ப்பில்லை, மேலும் அதன் மூலம் இருதரப்பு உறவில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
ஆகவே எந்த ஒரு பலனும் இன்றி ட்ரம்ப் வெற்று வாக்குறுதியை நம்பிப் பயனில்லை, அத்தகைய வெற்று வாக்குறுதிக்கான வாய்ப்பை இனி ட்ரம்புக்கு வழங்கப்போவதில்லை.
தான் ஏதோ அரசியல் சாதனை நிகழ்த்துகிறோம் என்ற பெயரில் அவர் மேற்கொள்ளும் இத்தகைய சந்திப்புகளை நம்பப் போவதில்லை, ஆகவே இனி அத்தகைய சந்திப்புகள் நிகழாது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக எங்கள் நாட்டு ராணுவத்தை பலப்படுத்துவோம்.
என்று கூறினார் அவர்.