இந்தியாவின் உதவியுடன் ஆம்புலன்ஸ் சேவை: ரணில் வருகையின்போது ஒப்பந்தம்

இந்தியாவின் உதவியுடன் ஆம்புலன்ஸ் சேவை: ரணில் வருகையின்போது ஒப்பந்தம்
Updated on
1 min read

இலங்கை பிரதமர் ரணில் விக்ர மசிங்க வரும் 14-ம் தேதி இந்தியா வருகிறார் அப்போது இரு நாடுகளுக் கும் இடையே சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் ஒப்பந் தங் கள் கையெழுத்தாக உள்ளன.

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்த லில் ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் புதிய பிரதமராகப் பதவி யேற்றார். அவர் மூன்று நாள் பயணமாக வரும் 14-ம் தேதி இந்தியா வருகிறார்.

இந்தியப் பிரதமர் நரேந் திர மோடி, வெளியுறவு அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட் டோரை அவர் சந்தித்துப் பேசு கிறார். அப்போது இருநாடுக ளுக்கும் இடையே சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதன்படி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அதி நவீன மருத்துவமனைகளை அமைக்கவும் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தவும் இந் தியா உதவிகளை வழங்கும்.

இந்தியாவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் படும் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பின்பற்றி இலங்கையிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ரூ.53 கோடியே 27 லட்சம் அளவுக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கும் என்று கொழும்பு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in