Published : 12 Jun 2020 03:43 PM
Last Updated : 12 Jun 2020 03:43 PM

கரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 76,15,953 பேர் கரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் சுமார் 76,15,953 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 76,15,953 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 20,89,825 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 1,16,035 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 8,05,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,058 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் விஞ்ஞானிகள் சிலரின் ஆலோசனையின் பேரில் அமெரிக்காவில் காசநோய் மற்றும் போலியோவைத் தடுக்கும் மருந்துகள் கரோனாவுக்குப் பலனளிக்குமா என்று புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x