இந்தோனேசியா கடல் பகுதியில் நிலநடுக்கம்

இந்தோனேசியா கடல் பகுதியில் நிலநடுக்கம்
Updated on
1 min read

இந்தோனேசியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.

சுலவேசி மற்றும் ஹல்மஹேரா தீவுகளுக்கு இடையே மொலுக்கா கடற் பகுதியில் 52 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. மலுக்கு தீவுப் பகுதிகளின் அங்கமான ஹல்மஹேராவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்தோ னேசியா நிலநடுக்க ஆய்வுமைய மூத்த அதிகாரி முச்சமத் ரியாதி தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தால் உயிருக்கோ உடமைக்கோ சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in